‘சான்ஸே இல்ல’ வாக்கிங் ஸ்டிக்கை வைத்து சிறுத்தையை விரட்டிய பெண்… வைரல் வீடியோ!

மும்பை அருகே கோரேகோன் என்ற பகுதியில் வீட்டுக்குள் புகுந்து தன்னை தாக்க வந்த சிறுத்தையை பெண் ஒருவர் கையில் வைத்திருந்த வாக்கிங் ஸ்டிக் மூலமாக அடித்து விரட்டியுள்ளார்.

இரவு நேரத்தில் வீட்டின் முன் பகுதியில் அமர வந்த பெண்மணி ஒருவரை பின்னால் மறைந்திருந்த சிறுத்தை மேலே பாய்ந்து பலமாக தாக்குறது, உடனே சுதாரித்துக் கொண்ட அந்த பெண் அருகே இருந்த வாக்கிங் ஸ்டிக்கை எடுத்து பலமாக அந்த சிறுத்தையை தாக்க ஆரம்பித்தார். உடனே சிறுத்தை அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இச்சம்பவத்தில் அந்த பெண்மணி சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டிற்கு வெளியே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

https://twitter.com/seithialai/status/1443466317307125764
Exit mobile version