அடடே… நீங்க கலெக்டர் தான… மேடம் உங்கள அடையாளமே தெரியல… வியக்க வைக்கும் வீடியோ…!!!

மைசூரில் மாவட்ட கலெக்டர் நடு ரோட்டில் நின்ற தனது காரின் டயரை அவரே கழற்றி மாட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மைசூர் மாவட்டத்தில் கலெக்டராக இருப்பவர் ரோகினி சிந்தூரி. இவர் யார் தவறு செய்தாலும் ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியினர் என்று வேறுபாடு பார்க்காமல் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுப்பார். இதனால் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றார் . அவர்களின் அதிரடி செயல்கள் மட்டுமல்லாது மக்களிடம் தனது எளிமையான அணுகுமுறையையும் பயன்படுத்தி அதிகம் பெயர் பெற்றார். அவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் ரோகினி சிந்தூரி தனது குடும்பத்துடன் சொந்த காரில் வெளியே சென்று கொண்டிருந்த போது திடீரென கார் டயர் பஞ்சர் ஆகியது. ஆகையால் கலெக்டர் ரோகிணி சிந்தூரி காரிலிருந்து ஜாக்கியை எடுத்து பஞ்சரான டயரை கழற்றி மற்றொரு டயரை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் வந்து ஒரு பெண் தனியாக கார் டயரை கழற்றி மாற்றுவதை பார்த்து ஆச்சரியப்பட்டு செல்போனில் வீடியோ எடுத்தார்.

அந்த நபர் உதவி செய்வதற்காக அருகில் சென்றபோது முகக்கவசத்தை கழட்டிய கலெக்டர் ரோகினி அவரிடம் பேசினார். அந்த நபர் உடனே நீங்கள் கலெக்டர் தானே என்று கேட்டார். அதற்கு கலெக்டர் ரோகிணி சிந்தூரி புன்னகைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார் .பிறகு அந்த நபர் தான் எடுத்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார் .கலெக்டர் ரோகினி சிந்தூரி தனது காரின் டயரை அவரை கழட்டி மாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Exit mobile version