பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம்… நடால்-ஜோகோவிச் இன்றுமோதல்

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் ஆகியோர் இன்று மோதலவுள்ளனர்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தில் பிரெஞ்சு ஓபனில் 12 முறை சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ‘கிங் ஆஃப் கிளே’ ரபேல் நடாலுடன்,ஜோகோவிச் மோதுகிறார்.

இந்த போட்டியில் நடால் வாகை சூடினால் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வதுடன், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற ரோஜர் பெரடரின் (ஸ்விட்சர்லாந்து) சாதனையை சமன் செய்வார். அதே நேரத்தில் ஜோகோவிச் வென்றால் அவருக்கு இது 18-வது கிராண்ட்ஸ்லாமாக அமையும்.

இருவரும் இதுவரை 55 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றனர். இதில் ஜோகோவிச் 29 முறையும், நடால் 26 தடவையும் வென்றுள்ளனர். பிரெஞ்ச் ஓபனில் 7 முறை மோதி உள்ளனர். இதில் நடால் 6-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறார்.
இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது.

Exit mobile version