ராஜூவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ராஜூவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறைவாசத்தில் உள்ளனர். இதில் நளினி வேலூர் பெண்கள் சிறையில் இருந்து வரக்கூடிய நிலையில் தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை தொடர்ந்து சிறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தான் நேற்று சிறைக்கைதி மற்றும் சிறைக்காப்பாளர் அல்லிராணியுடன் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சல் அடைந்த நளினி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக நளினியின் வழக்கறிஞர் கூறுகையில், 30 ஆண்டு காலமாக சிறையில் வசிக்கும் நளினி குறித்து இதுவரைஇதுபோன்று எந்தவித குற்றச்சாட்டும் ஏற்பட்டதில்லை. தற்போது சிறைவாசிக்குகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று சிறை அதிகாரிகள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சிறைக்குள் நளினிக்கு எதிராக சதி நடப்பதாக தெரியவருகிறது என குற்றம் சாட்டினார்.