ராகுல் தாக்கப்பட்டதை கண்டித்து நாராயணசாமி உண்ணாவிரத போராட்டம்…

ராகுல் தாக்கப்பட்டதை கண்டித்து புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் தலித் சமூகத்தை சேர்ந்த 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். உயிர் இழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்களுடன் சேர்ந்து ஊர்வலமாக சென்றார். அப்போது அவர் உத்தரபிரேதச மாநில போலீசாரால் தடுத்து நிறுத்தியுள்ளார். அதனால் அங்கு பெரிய பிரளயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து காங்கிரசார் பல்வேறு மாநிலங்களில் ராகுல் காந்தியை தாக்கி கைது செய்த உத்தரபிரதேச போலீசாரை கண்டித்தும், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை கைது செய்ததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவித்தார். இதன்படி இன்று காலை 9 மணியளவில் அண்ணா சிலை அருகே காங்கிரசார் உண்ணாவிரதத்தை தொடங்கினர்.

போராட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலகண்ணன், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட, வட்டார, அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். இன்று மாலை ஐந்து மணிக்கு உண்ணாவிரதம் முடிவடைகிறது.

Exit mobile version