நாடு முழுவதும் நாளை தொடங்குகிறது Neet தேர்வு…முன்னேற்பாடுகள் தீவிரம்….

கொரோனா நோய்ப்பரவல் காரணமாக மருத்துவம் படிப்பதற்கான Neet தேர்வை தள்ளி வைக்க வேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து தேசிய தேர்வு முகமை அமைப்பு திட்டமிட்டபடி வரும் 13-ம் தேதி(நாளை) நாடு முழுவதும் Neet தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் Neet தேர்வு மையங்கள் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, மதுரை, சேலம், நெல்லை உள்பட 14 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வை 1,17,990 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.

மாணவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகே தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப் படுவார்கள் என்றும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்துவர வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு மையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் மேலும் சானிடைசர்கள் வைக்கும் பணிகளும் , சமூக இடைவெளியை கடைப்பிடித்து மேஜைகள் மற்றும் இருக்கைகள் அமைக்கும் பணிகள் போன்ற அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

தேர்வு எழுத வருகை தரும் மாணவ-மாணவிகள் வழக்கமான விதிமுறைகளைப் பின்பற்றவும்,கூடுதலாக கொரோனா கால விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version