TRIGGER WARNING : இது ஒரு தற்கொலை குறித்த செய்தி இதனால் தாங்கள் மனதளவில் பாதிக்கப்பபடுவீர்கள் என்றால் இதை தொடர்ந்து படிக்க வேண்டாம். (Helpline number : 91-9152987821)
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட் வரவில்லை என மாணவி ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நீட் தேர்வு என்பது பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவ சேர்க்கைக்காக நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வு ஆகும். இந்த தேர்வானது அனைத்து அரசு கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும் எனவும் தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் எனவும் அரசு அறிவித்தது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த காலத்தில் நவம்பர் மாதம் இந்த தேர்வுக்கான அரசாணை தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த அனிதா என்னும் மாணவி 2016-17 கல்வியாண்டில் 1176 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். எனினும் 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றதால், தன்னுடைய கனவான மருத்துவ படிப்பு சாத்தியமில்லை என செப்டம்பர் ஒன்றாம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
அனிதாவின் மரணத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் நீட் தேர்வை எதிர்த்து பல போராட்டங்கள் கண்டன குரல்கள் எழுந்தன இன்றும் எழுந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வருகின்ற 13 ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் வழக்கம் போல் எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த மாணவி நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தார் தேர்விற்கான ஹால் டிக்கெட் வராத காரணத்தால் மன உளைச்சல் அடைந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.