திமுகவில் புதிய நிர்வாகிகளை நியமித்து துரைமுருகன் அறிவிப்பு…

திமுக தலைமைக் கழகத்தில் சில முக்கியப் பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பில் துரைமுருகன் கூறியது யாதெனில், தேர்தலின் பணிக்குழு இணைத்தலைவராக ராஜகண்ணப்பனை நியமித்துள்ளார்.
செயலாளர்களாக, வேலூர் ஞானசேகரன், வேலூர் விஜய், பரணி இ.ஏ.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைக் கழகச் செய்தித்தொடர்புச் செயலாளராக பி.டி.அரசகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தீர்மானக் குழுச் செயலாளராக ஏ.ஜி.சம்பத்தும், தீர்மானக் குழு இணைச் செயலாளராக மு.முத்துசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாய அணி இணைச் செயலாளர்களாக எஸ்.கே.வேதரத்தினம், குறிஞ்சி என்.சிவகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ அணி துணைத் தலைவராக டாக்டர் எ.வ.வே.கம்பனும், மருத்துவ அணி இணைச் செயலாளராக டாக்டர் இரா.இலட்சுமணனும் நியமிக்கப்பட்டுள்ளனர். மீனவர் அணிச் செயலாளராக ஆர்.பத்மநாபன், மீனவர் அணி துணைச் செயலாளராக துறைமுகம் சி.புளோரன்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன் இந்த பொறுப்புகளில் இருந்தவர்கள் புதிதாக நியமித்தவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவார்கள்.

Exit mobile version