சிலிண்டர் வாங்குபவர்களுக்குப் புதிய சலுகை!! எப்படினு தெரியுமா???

இண்டேன் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் பேடிஎம் மூலம் பணம் செலுத்தினால், ரொக்கச் சலுகை வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Indane Gas Cylinder

தற்போது கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் பெரிதும் பண பரிவர்த்தனைகளை விரும்புவதிலை. பெரும்பாலும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதையே பொது மக்களும், கடை உரிமையாளர்களும் விரும்புகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தற்போது இண்டேன் கேஸ் நிறுவனமும் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது.

தற்போது, இந்தியன் ஆயில் நிறுவனம், பேடிஎம் (Paytm) நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. அதன்படி, சமையல் சிலிண்டர்களுக்காக பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஐந்து ரூபாய் கேஷ் பேக் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் போது, டெலிவரி செய்யும் ஊழியர்கள் Paytm QR Code tag வைத்திருப்பார்கள். வாடிக்கையாளர்கள் QR Code-ஐ ஸ்கேன் செய்து தங்களது கட்டணத்தைச் செலுத்தும் ஒவ்வொரு முறையும், பேடிஎம் மூலம் அவர்களுக்கு ஐந்து ரூபாய் கேஷ் பேக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை தற்போது தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி வரையில் மட்டுமே அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற திட்டங்களால், ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா தொற்று பரவும் அபாயம் குறையும் என்றும், வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் அச்சமில்லாமல் இருப்பார்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version