இந்தியா முழுவதும் இன்று முதல் ஓட்டுநர் உரிமத்துக்கான சில புதிய சீர்திருத்தங்கள் அமலுக்கு வரவுள்ளது.
- ஓட்டுநர் உரிமத்துக்கான ஆவணங்கள், இ-சலான்கள், ஆகிய முறைகளை இனிமேல் இணையதளம் வழியாக மட்டுமே பெறப்படும் எனவும்ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இனிமேல் அதிகமான ஆவணங்களைப் பெறத் தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
- மக்களுக்கு மருத்துவக் காப்பீடுகளை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் கொள்கை மற்றும் பாலிசி குறித்த விளக்கங்களை மக்களுக்குப் புரியும் வகையில் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இனிமேல் டெலிமெடிசினிக்குப் இந்தக் காப்பீடு பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
- சுவீட் கடைகளை வைத்திருப்போர் அந்த இனிப்புகள் எத்தனை நாட்களுக்குள் சாப்பிட வேண்டுமென்பதை வாடிக்கையாளருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
- நாட்டில் இறக்குமதியாகும் டிவிக்களுக்கு 5% சுங்க விதிக்கப்படுகிறது. இதனால் அவற்றில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் வெளிநாட்டிலுள்ள உறவினர்களுக்குப் பணப்பரிவர்த்தனை செய்தால் அதற்குக் கூடுதலாக 5% வரி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.