SeithiAlai

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை

தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு சில பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Exit mobile version