நீரவ் மோடிக்கு உதவிய வங்கி அதிகாரிகள் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல்…

மும்பையில் உள்ள ஒரு பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளையில் வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவருடைய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்து இப்போது வெளிநாடு தப்பி ஓடிவிட்டனர் நீரவ் மோடி இப்போது லண்டன் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளார்.

இந்த நிலையில் இந்த மோசடிக்கு உதவிய வங்கி அதிகாரியான கோகுல்நாத் ஷெட்டி. இவர் அந்த காலகட்டத்தில், அந்த வங்கிக்கிளையில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். தற்போது ஓய்வு பெற்று விட்டார்.

அவரும், இந்தியன் வங்கியில் முக்கிய இடத்தில் பணியாற்றி வரும் அவருடைய மனைவி ஆஷா லதாவும் வருமானத்தை மீறி ரூ.2 கோடியே 63 லட்சம் சொத்து சேர்த்ததாக CBI தனியாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில், கோகுல்நாத் ஷெட்டி மீதும், ஆஷா லதா மீதும் மும்பையில் உள்ள CBI கோர்ட்டில் CBI குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Exit mobile version