நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் காந்தி கண்டனம்…

நீங்கள் செய்த பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி,சரியாக திட்டமிடாத ஊரடங்கு என மூன்று செயல்களால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இது கடவுளின் செயல் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறிஇருந்தார் அதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதில் உண்மையில்லை எனவும் நாட்டின் பொருளாதாரம் மூன்று செயல்களால் மிகவும் பாதிக்கப்பட்டளளது. 500, 1000 நோட்டுகளை ஒழித்தது, குறைபாடு உள்ள ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியது, ஊரடங்கை கையாள்வதில் தோல்வியடைந்தது. இந்த மூன்றும் தான் பொருளாதார பாதிப்பிற்கு காரணம் .இவ்வாறு ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

Exit mobile version