மயிலாப்பூரில் இன்று அதிகாலை சம்பவம் 3 வது மாடி பால்கனி பெயர்ந்து விழுந்தது!.

மயிலாப்பூரில் இன்று அதிகாலை சம்பவம் 3 வது மாடி பால்கனி
பெயர்ந்து விழுந்தது!

தமிழகம் முழுவதும் நிவர் புயலால் பலத்த மழை பெய்து வருகிறது குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதனால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் இந்த நிலையில்
சென்னை மயிலாப்பூர், சாந்தோம் நெடுஞ்சாலையில் குயில் தோட்டம் குடிசைப் பகுதி மாற்று வாரியம் உள்ளது. இதில் உள்ள “ஜி “பிளாக்கின் மூன்றாவது மாடி பால்கனி இன்று அதிகாலை பெயர்ந்து விழுந்தது .கீழே விழுந்த இடத்தில் மக்கள் தூங்குவது வழக்கம்.நல்லவேளையாக யாருமில்லை. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

சுமார் 2000 மக்கள் வசிக்கும் அப்பகுதியில் இச்சம்பவத்தால் பீதி நிலவுகிறது.

Exit mobile version