தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயலின் இப்போதைய நகர்வு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என்றும் அடுத்த 12 மணி நேரத்தில் இது அதி தீவிர புயலாக மாறும் என்றும் அப்போது காற்று சுமார் 155 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடிய வாய்ப்பு உள்ளது.
கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு நோக்கி 6 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. நேற்று இரவு 11.30 மணிக்கு கடலூருக்கு சுமார் 310 கி.மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு 320 கி.மீட்டர் தொலைவிலும் இருந்தது. சென்னைக்கு 380 கி.மீட்டர் தொலைவில் நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளது.