அலைகள் இன்றி குளமாக மாறிய கன்னியாகுமரி கடல்…

தினம் தினம் நிலைமாறி வரும் கன்னியாகுமரி கடலால், கடற்கரையில் வசிக்கும் மீனவர்கள் மத்தியில் ஒருவித அச்சமும் நிலவி வருகிறது.

தமிழகத்தின் கடல் அழகை எடுத்துக்காட்டும் இடங்களில் ஒன்று கன்னியாகுமாரி. இங்கு கிழக்கே வங்கக்கடலும், தெற்கே இந்திய பெருங்கடலும், மேற்கே அரபிக்கடலும் அமைந்துள்ளன. இதன் பெருமையே முக்கடல் சங்கமிக்கும் இடமாக இது திகஸ்வது தான். மேலும் இங்குஉள்ள வள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் சிலை சுற்றுலா பயணிகளுக்கு விருந்து.

இங்கு திடீரென நடந்த சம்பவம் அனைவரையும் அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆரம்பத்தில் 2 நாட்கள் இரவு நேரங்களில் கடல் சுமார் 50 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்பட்டது. நேற்று முன்தினம் 3-வது நாளாக பகலில் கடல் உள்வாங்கியது. இதனால், கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள், மணல் பரப்புகள் வெளியே தெரிந்தன. இந்த நிலையில் நேற்று கடல் சகஜ நிலைக்கு திரும்பினாலும், வங்க கடல் அலையே இல்லாமல் குளம் போல் அமைதியாக காட்சி அளித்தது. அதேநேரத்தில் இந்திய பெருங்கடலும், அரபிக்கடலும் சாதாரண அலையுடன் காட்சி அளித்தது.

இதனால் அங்கு தங்கி உள்ள அனைவரும் கலங்கி உள்ளனர். அதுமட்டுமின்றி இதேபோல் 2004 ல் நடந்த பொது அதனை தொடர்ந்து சுனாமி வந்ததால் இந்த அறிகுறி அனைவரையும் கலங்கடித்து உள்ளது. மேலும் அங்குள்ள மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு போவதையும் தவிர்த்து வருகின்றனர்.

Exit mobile version