2010-ஆம் ஆண்டில் இந்திய நகரமான ஜோத்பூரில் கதிரியக்க சாம்பல் (Radioactive ash) கண்டெடுக்கப்பட்ட பின்தான் இந்த சதிக் கோட்பாடு கிளம்பியது.
குறிப்பிட்ட மகாபாரத வசனங்களில் மகாபாரத யுத்தம் நடந்தாக சொல்லப்படும் இடத்தில் கதிரியக்க சாம்பல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளத்தால் தான், பண்டைய காலத்திலேயே அணுபோர் நடத்தப்பட்டுள்ளது என்கிறது ஒரு சதிக் கோட்பாடு.
குருக்ஷேத்திரப் போரினைக் குறிப்பிடுகையில், அகிலத்தின் அதனை ஆற்றலையும் கொண்ட ஜ்வாலை ஒன்று காற்றில் வீசப்பட்டது, 10000 சூரியங்களின் சக்தி கொண்டு எழுந்தது..இது போன்ற வரிகள் காணப்படுகின்றன.
இவை எதைக் குறிக்கிறதென்று ஜப்பானில் நடந்த குண்டு வீச்சிற்குப் பிறகே புரிந்து கொண்டனர்..இது அணு சக்தியைப் பற்றி கூறிய வரிகள் என்று. இரும்பின் ஒரு வகை அணு சக்தி கொண்டது. அதைப் பயன்படுத்தியதாகவும் வரிகள் கிடைத்திருக்கின்றன.
பிற்காலத்தில் அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்பட்ட அமெரிக்க இயற்பியலாளர் ஜூலியஸ் ராபர்ட் ஒபென்ஹெய்ம்ர் (Julius Robert Oppenherimer) வேத தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அணுகுண்டு கண்டு பிடித்தவுடன், அதற்கேற்ற பகவத் கீதை வாக்கியத்தை அவர் சொன்னதாகக் கூறப்படுகிறது.
இவை அனைத்திற்கும் எந்தவித சான்றும் இல்லை என்றாலும், கேட்பதற்கு மிக ஆச்சர்யமாக உள்ளது.