சென்னை பேராசிரியைக்கு ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது.
சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை, கோவையில் உள்ள உறவினரை பார்க்க வந்திருந்தார். பின்னர் தான் வந்த வேலையை முடித்துக்கொண்டு கோவையில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டார். அப்போது நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அந்த ரயில் காட்பாடி அருகே சென்றகொண்டு இருந்தது.
அப்போது அருகே அமர்ந்து பயணம் செய்த முதியவர் தன் மகள் வயதில் இருந்த அந்த பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதை எதிர்பாக்காத பேராசிரியரோ அவரை தடுக்க முயன்றுள்ளார். அவர் மீண்டும் மீண்டும் தொல்லை செய்யவே பேராசிரியை கூச்சலிட்டு கத்தினார்.
இதைப்பார்த்த மற்ற பயணிகள் அந்த முதியவருக்கு தர்மஅடி கொடுத்து காட்பாடி வந்ததும் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.