தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் – தலைமை செயலாளர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் வெ.இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பண்டிகை காலங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு, மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் பிற்பகல் 12 மணியளவில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற உள்ளது.

காணொலி வாயிலாக நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளின் போது கடைபிடிக்க வேண்டிய கோவிட் 19 பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும் இன்று ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version