இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்று!!


டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி;நாட்டின் மொத்த பாதிப்பு 97 ஆக உயர்வு.

டெல்லி,
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 20ஆக அதிகரித்துள்ளது என்றும் இதில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாடு முழுவதும் ஒமிக்ரான் மொத்த பாதிப்பு 97 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் பதிவாகி உள்ள மொத்த பாதிப்புகளில் 20 பாதிப்புகள் டெல்லியில் உறுதிபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version