ஆம்னி பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படுகின்றன…

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்க பட்டு வருகின்றது இதனால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன.

இதில் முக்கியமானது போக்குவரத்துத்துறை, இதனிடையே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் வெளி மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்தை அரசு அனுமதித்தது. அதன்படி, அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.ஆனால் தனியார் ஆம்னி பேருந்துகள் குறைந்த பயணிகளுடன் பேருந்துகளை இயக்க சாத்தியம் இல்லை என கூறி இயக்காமல் இருந்தது.

இதனிடையே
ஆம்னி மற்றும் தனியார் பேருந்துகளும் 60 சதவீத பயணிகளுடன் இயக்க தமிழக அரசு அனுமதியளித்தது. ஆனால் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்து பேருந்துகளை இயக்க முன்வரவில்லை.

இந்த நிலையில், நாளை மறுநாள் முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மத்திய மாநில அரசின் விதிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படும் எனவும் பயணிகள் வருகையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version