இன்று முதல் நான்கு நாட்களுக்கு பள்ளி கல்லூரி ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை!!!

தீபாவளி பண்டிகையை ஒட்டி, இன்று (நவம்பர் 12)முதல் நான்கு நாட்களுக்கு, ‘ஆன்லைன்’ வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்க படவில்லை ஆன்லைனில் வகுப்புகள் மட்டும் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், வரும், 14ம் தேதி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனையொட்டி, அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும், 14ம் தேதி குழந்தைகள் தினம் என்பதால், அன்று மட்டும் வகுப்புகள் இல்லாமல், ‘ஆன்லைனில்’ பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுக்கு, தனியார் பள்ளிகள் மட்டும் ஏற்பாடு செய்துள்ளன.

Exit mobile version