அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுடன் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்று அ.தி.மு.க.-வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
கடந்த 7-ஆம் தேதி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றவர்களின் பெயரை அறிவித்தார். அதில், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம், காமராஜ், ஜே.சி.டி. பிரபாகரன், மனோஜ், பாண்டியன், மோகன், கோபல கிருஷ்ணன் மற்றும் சோழவந்தான் மாணிக்கம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.