தமிழகத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலை… பிரபல நிறுவனம் ஒப்புதல்…!!!

குஜராத்தை தலைமையிடமாக கொண்ட ஐநாக்ஸ் ஏர் ப்ரொடக்ஷன் நிறுவனம் தமிழகத்தில் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அதுமட்டுமன்றி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது.

அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் குஜராத்தை தலைமையிடமாக கொண்ட ஐநாக்ஸ் ஏர் ப்ரொடக்ஷன் எனும் நிறுவனம் 2000 கோடி முதலீட்டில் தமிழகத்தில் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க உள்ளது.

இது தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் உட்பட எட்டு மாநிலங்களில் தொழிற்சாலைகளை அமைக்க உள்ளது. ஆக்சிஜன் மட்டுமன்றி நைட்ரஜன் மற்றும் ஆர்கான் வாயுக்களையும் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

இதனால் பலருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Exit mobile version