மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்த வேண்டும் : டி.டி.வி தினகரன் டுவீட்…

அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு  மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்திட வேண்டும் என்றும், விதிகளுக்கு புறம்பாக விடப்பட்ட சாலை மேம்பாடு பணி டெண்டரை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது பாராட்டுக்குரியது என்றும் டி.டி.வி. தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
TTV Dinakaran

இது தொடர்பாக டி.டி.வி. தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கிராம சாலைகளை மேம்படுத்துவதாகக் கூறி  பழனிசாமி அரசு விதிகளுக்கு மாறாக நடைமுறைப்படுத்த நினைத்த சுமார் 2,650  கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பாராட்டுக்குரியது. இதனை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு ஊராட்சி மன்றங்களின் மூலமாக கிராம சாலைப் பணிகளை  அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். கனிம வளம், உள்ளாட்சி, உயர்கல்வி போன்ற துறைகளிலும் நடந்த பல குளறுபடிகளுக்கு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஏற்கனவே ஆளாகியிருக்கிறது பழனிசாமி அரசு.

குறிப்பாக அரியர் தேர்வுகளில் பாஸ் ஆனதாக அறிவித்தது, வெளி மாநிலத்தவர் தமிழக அரசின் பணிகளில் அமர்த்தப்பட்டது போன்ற விஷயங்களில் தனது தவறான முடிவுகளுக்காக கடும் கண்டனத்திற்கு இந்த அரசு ஆளானதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு  மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version