ஸ்டார் ஜோடி விவகாரத்தால் கதிரை தொடரும் சர்ச்சைகள். அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார் கதிர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பலர் மனதையும் கவர்ந்தவர் கதிர். கதிர் முல்லை ஜோடி என்றாலே எல்லாருக்கும் பிடித்த ஜோடி தான். பாண்டியன் ஸ்டோர்ஸும் எல்லோருக்கும் பிடித்த சீரியல். இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அனைவரின் மனதையும் கவர்ந்ததுதான். கதிர் – முல்லை ஜோடிக்கு ரசிகர்களும் ஏராளம். மேலும் இவர்கள் பெயரில் சமூகவலைதளத்தில் ஆர்மிக்களும் உருவாகியுள்ளன.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த வாரம் வட்டிக்கு கடன் கொடுத்த நபர் ஒருவர் தன் மனைவி மற்றும் குடும்பத்தாரை அநாகரிகமாக பேசியதால் கதிர் அவரை அடித்தார். பதிலுக்கு அடி வாங்கிய நபர் போலீசில் புகார் கொடுக்கவே போலீஸ் கதிரை அடித்து காவலில் வைத்தனர். கதிரை மீட்க பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் படாதபாடு பட்டது. முல்லை கதாபாத்திரமும் கதிருக்காக அழுக பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் சோகமானார்கள்.
சீரியலின் நிலைமை இவ்வாறு இருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடிகளை தற்போது நடந்த ஸ்டார் ஜோடி கொண்டாடத்தில் அழைக்கபடவில்லை. இதற்கு சித்ராவின் தரப்பிலிருந்து பல பதில் கூறபட்டாலும் இப்போது கதிர் அவர் தரப்பு கூறுகையில் எதிர்மறையான விஷயங்களுக்கும் நேர்மறையாகவே அணுகியிருக்கிறேன். காதல், சண்டை என எந்தக் காட்சியானாலும் என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்தியிருக்கிறேன். இனியும் சிறப்பாக செய்வேன் என உறுதியளிக்கிறேன். கதிரை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மட்டும் தான் பார்க்க முடியும். ஸ்டார் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு எங்களை அழைத்திருந்தார்கள்.
ஆனால் அது ஏன் நடக்கவில்லை என்பது கடவுளுக்குத் தான் தெரியும். எங்களை எதிர்பார்த்தவர்களுகளுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். எல்லாவற்றிலும் அடுத்தமுறை என்ற ஒன்று இருக்கிறது. அப்போது பார்த்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார்