கருக்கலைப்பை 24 வாரம் வரை அனுமதிக்கும் சட்டத் திருத்தம் : நாடாளுமன்றம் ஒப்புதல்

கருக்கலைப்பை 24 வாரம் வரை அனுமதிக்கும் சட்டத் திருத்தம் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

சிறுமிகள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் கருவுற்றிருந்தாலும் 6 வாரம்வரை கருக்கலைப்பு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. medical termination of pregnancy act 2020 என்று சொல்லக்கூடிய இந்த மசோதாவிற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மக்களவையில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. தற்போது மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு சட்டமாக மாறியிருக்கிறது.

இந்த சட்டத்தின்படி, மற்ற நாடுகளில் உள்ளதைப்போல் இந்தியாவிலும் முக்கிய தருணங்களில் 24 வாரங்கள்வரை பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version