பின்னோக்கி ஓடிய ரயில் சீட் நுனியில் பயணிகள் : உச்சகட்ட அதிர்ச்சி வீடியோ…!!

பின்னோக்கி ஓடிய ரயில் சீட் நுனியில் பயணிகள் உச்சகட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

உத்தரகாண்டில் பூர்ணகிரி சதாப்தி விரைவு ரயில் சுமார் 35 கிலோமீட்டர் தூரம் வரை பின்நோக்கி சென்றுள்ளது. புர்ணகிரி சதாப்தி விரைவு ரயில் தண்டவாளத்தில் மாடுகள் நின்றதால் ரயில் ஓட்டுநர் பிரேக் போட்டுள்ளார். அப்போது ரயில் ஒரு மாடு மீது மோதிவிட்டதாகவும் அதன் பிரேக் கட்டுப்பாட்டை இழந்துவிட்டு ரயில் பின்நோக்கி ஓடியதாகவும் கூறப்படுகிறது.

காத்திமா ரயில் நிலையம் வரை பின்நோக்கி சென்ற இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் சீட் நுனியில் பெரும் அச்சத்தில் உறைந்திருந்தனர். அதிர்ஷ்டவசமாக ரயில் தடம் புரளவில்லை. இதனால் பயணிகள் அனைவரும் ஆபத்தின்றி உயிர்தப்பி , பயணிகள் பின்னர் பேருந்துகளில் தன்காபுர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சில பயணிகள் மாற்று ரயில் மூலம் அவர்கள் டெல்லி அனுப்பி வைக்கப்பட்டனர். புர்ணகிரி சதாப்தி விரைவு ரயில் வேகமாக பின்புறம் கடந்து செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version