பஞ்சாப் மாநிலத்தில் தொடரும் விவசாயிகள் போராட்டம்; 280 ரயில் சேவை பாதிப்பு!!


பஞ்சாப் மாநிலத்தில் தொடரும் விவசாயிகள் போராட்டம்; 280 ரயில் சேவை பாதிப்பு

டெல்லி,
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பின்னரும், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என பஞ்சாப் மாநிலத்தின் ஃபிரோஸ்பூர் மாவட்டத்தில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக, ஃபிரோஸ்பூர்-அகர்தலா , ஜலந்தர் கான்ட்-அமிர்தசரஸ், ஜம்முத்வி-பத்திண்டா , அகமதாபாத்-ஜம்முத்வி உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் விவசாயிகள் போராட்டம் காரணமாக அவ்வழியே செல்லக்கூடிய 280 ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த நான்கு நாட்களில் நாட்களில் 400க்கும் மேற்பட்ட ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வடக்கு ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி சசி கிரன் தெரிவிக்கும் போது, அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை தங்களுடைய போராட்டம் தொடரும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளார்கள். இதன் காரணமாக தொடர்ச்சியாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதிப்படையாத வகையில் வகையில் முன்னதாகவே வடக்கு ரயில்வே ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version