ஈரோடு அருகே தாடியை கிண்டல் செய்த நண்பரை கொன்றவர் கைது

தாடி வைத்திருந்ததை கிண்டல் செய்த நண்பரை கத்தியால் குத்திக் கொன்ற கட்டுமான தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். 

தற்போது உள்ள சமூகத்தில் தாடி இருந்தால் தான் கெத்து என்ற பின்பம் வந்துள்ளது. அதுமட்டுமின்றி தாடி நிறைய வைத்திருந்தாலும் கிண்டல் செய்துதான் வருகின்றனர்.

அதற்கு ஏற்றார்போல் தற்போது ஈரோடு பகுதியில் தாடி வைத்திருந்ததை கிண்டல் செய்த பெருமாளை தொழிலாளி லட்சுமணன் கொலை செய்துள்ளார். இதனால் அங்குள்ள பகுதியில் பதட்டம் நிலவி வருகின்றது.

கோவிலுக்காக நேர்ந்து இருந்த நிலையில் தாடியை விமர்சித்ததால் தான் அவரை கொன்றதாக லட்சுமணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Exit mobile version