பச்சிளம் குழந்தை புதிய நம்பிக்கையாய்! பிரபலமாகும் புகைப்படம்.

புதிதாகப் பிறந்த குழந்தை மருத்துவரின் அறுவை சிகிச்சை முகக்கவசத்தை ‘அகற்ற’ முயற்சிப்பது போன்ற புகைப்படம் சமீபத்தில் மிகவும் பிரபலமாகி இருக்கிறது.

முகக் கவசம் கட்டாயம் என்று இல்லாமல், அனைவரும் நினைத்த மாத்திரத்தில் வெளியே செல்லும் அந்த நாட்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த புகைப்படம் வெளியானது அனைவருக்குமே ஒரு புதிய நம்பையைத் தருவதாக உள்ளது

இந்த படத்தை இன்ஸ்டாகிராமில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் சமர் செயிப் பகிர்ந்துள்ளார். அவரது முகக் கவசத்தை இழுத்தவாறு இருக்கும் அந்தக் குழந்தை, அருகில் பெரிய சிரிப்புடன் அந்த மருத்துவர் காணப்படுகிறார்..

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் படத்தைப் பகிர்ந்துகொண்டபோது, ​​”நாங்கள் அனைவரும் முகமூடியை விரைவில் கழற்றப் போகிறோம் என்பதற்கான அடையாளம் எங்களுக்கு தேவைப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

Exit mobile version