குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் பரவும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம்… சுகாதாரச் செயலாளர் விளக்கம்

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் பரவுகிறது என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக பெரிய அளவிலான மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் தாலுகா அளவிலான மருத்துவமனையிலும் ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை,கோவை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கொரோனோ பாதிப்பு 5 சதவீதம் வரை குறைந்துள்ளது. மழைக்காலம் துவங்குவதால் கொரோனோ மட்டுமல்லாமல் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பண்டிகை கால எச்சரிக்கை
பொதுமக்கள் தற்போதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கேரளாவில் ஓணம் பண்டிகையால் மக்கள் அலட்சியமாக இருந்ததாலே, அங்கு மீண்டும் கரோனா அதிகளவில் பரவிக் கொண்டிருக்கிறது. அதனால், பொதுமக்கள், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால ஷாப்பிங்கை சமூக இடைவெளி விட்டு கவனமாக மேற்கொள்ள வேண்டும்.
பண்டிகை மற்றும் மழைக் காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் கொரோனோ இறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து தற்போது 1.5 ஆக குறைந்துள்ளது.

பிம்ஸ் நோய்
அரசு மருத்துவமனைகளில் கொரோனோவிற்கு 80 வகையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காய்ச்சல் முகாம் குறைக்கப்படவில்லை.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தற்போது தகரம் வைத்து அடைக்கபடுவதில்லை. கொரோனா பாதிக்கபட்டவர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
எய்ம்ஸ் பணிகள்
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் அமைப்பதற்கான ஜப்பானை சேர்த்த ஜைக்கா நிறுவனம் ஜனவரிக்குள் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. ஒப்புதல் வாங்கியவுடன் விரைவில் எய்ம்ஸ் கட்டிட பணிகள் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்

Exit mobile version