போட்டோர்ஷூட்டில் நடந்த விபரீதம்- மணமகன் உயிரிழப்பு; ஆபத்தான நிலையில் மணமகள்..!!

post wedding shoot turns tragic
post wedding shoot turns tragic

திருமணத்துக்கு பிந்தைய போட்டோஷூட்டின் போது ஆற்றில் தவறி விழுந்த மணமகன் உயிரிழந்த நிலையில், புதுமணப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கேரளாவிலுள்ள கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரெஜின்லால். இவருக்கும் குற்றியாடிபுழா அருகேவுள்ள பாலேரி பகுதியைச் சேர்ந்த கனிகா என்பவருக்கும் கடந்த மாதம் 14-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று திருமணத்துக்கு பிந்தைய போட்டோஷுட் நடைபெற்றது.

இதற்காக புதுமணத் தம்பதி இருவரும் உறவினர்களுடன் சேர்ந்த குற்றியாடி பகுதிக்கு வந்தனர். அங்குள்ள குற்றியாடிபுழா ஆற்றின் கரையோரம் நின்றுகொண்டு தம்பதிகள் போஸ் கொடுத்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மணமக்கள் இருவரும் ஆற்றில் மூழ்கினர்.

இதை பார்த்து உறவினர்கள் சத்தம் போட்டதும், அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஆற்றில் குதித்து மணமக்களை மீட்டனர். ஆனால் மணமகன் ரெஜின்லால் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட கனிகா உயிருக்கு ஆபத்தான நிலையில் கோழிக்கோட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பேராம்பிரா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version