கோவையில் தொடரும் அபாயம் சாலையில் பறக்கும் பிபிஇ கிட்டுகள்!.

பிபிஇ கிட்டுக்கலாள் நிகழும் ஆபத்து. அவற்றை அப்படியே குப்பைத்தொட்டியில் போட்டதால் மக்கள் பரபரப்பு.

சில தினங்களுக்கு முன் கோவை ஈஷா சுடுகாடு பகுதியில் பயன்படுத்தப்பட்ட பிபிஇ கிட்டுகள் சாலையில் பறந்து கிடந்தது. 

சுகாதார பணியாளர்கள், அதிகாரிகள் அலட்சியம் காரணமாகச் சாலையில் கொரோனா ஆடைகள் சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த ஆடைகள் காரணமாக நோய் பரவும் அபாயம் கோவையில் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சில தினங்களுக்கு முன் நாம் செய்தி வெளியிட்டபோதும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்கின்றனர்.

சமீபகாலமாக கொரோனா தொற்று தடுப்பு ஆடைகளான பிபிஇ கிட்டுகள் கோவை மாவட்டத்தில் உள்ள சாலைகளில் காண முடிகிறது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கின் காரணமாக உரிய முறையில் இந்த ஆடைகள் கழிக்கப்படாமல் இப்படி நோய் ஆபத்தை உருவாக்கி வருகிறது.

கொரோனா நோய் காரணமாக ஊரடங்கு, அபராதம் விதிக்கும் அரசு இந்த அவலத்தைப் பார்த்தும் கண்டுகொள்ளாமல் உள்ளது ஏன் என்ற கேள்வி மர்மமாகவே உள்ளது. அரசு இந்த பிபிஇ கிட்டுகளை எப்படிக் கழிக்க வேண்டும் எனத் தெளிவான வழிகாட்டுதலைச் சுகாதார அதிகாரிகளுக்கு உணர்த்தியுள்ளது.

இந்த வைரசின் ஆபத்து குறித்து மக்களுக்கு எடுத்துக் கூறியவர்கள் மருத்துவர்கள்தான். அப்படிப்பட்ட மருத்துவர்களே கோவையில் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆம் கொடிசியா கொரோனா சிகிச்சை மையத்தின் வளாகத்தில் எடுக்கப்பட்ட படங்கள்தான் இவை. சமூக வலைதளத்தில் வெளியான இந்த படங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது..

இந்த வகை பிபிஇ கிட்டுகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பயன்படுத்தப்பட்ட கிட்டுகளை குழி தோண்டி, அதில் உள்ளே போட்டுத் தீயிட்டுக் கொழுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. இந்த செயலை நேரடி தொடர்பின்றி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்த ஒருவரின் உடல், தொற்று இருப்பவர்களுடன் தொடர்பு வைக்கும் போது இந்த வகை வைரஸ்கள் எளிதாகப் பரவும் என்பதாலே இந்த பிபிஇ கிட்டுகள் பயன்படுத்தப்படுவதாக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், மாநகரம் முழுவதும் இந்த வகை கிட்டுகள் ரோட்டில் பரப்பதைப் பார்த்துக் கொண்டு கோவை கொரோனா தடுப்பு அதிகாரிகள் எப்படிச் சகித்துக் கொள்கிறார்கள் என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. நோய்த் தொற்றின் ஆபத்தை உணர்ந்து அதிகாரிகள் இந்த நிலையை மாற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

Exit mobile version