கொரோனா நோய் உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவிவருகிறது குறிப்பாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் வரை யாரையும் இந்த நோய் விட்டு வைக்க வில்லை.
அமித்ஷா, அமிதாப் பச்சன், பின்னணி பாடகர் எஸ். பி. பி. ஆகிய அனைவரையும் இந்த நோய் தாக்கியுள்ளது, இதில் அமித்ஷா மற்றும் அமிதாப் பச்சன் கொரோனாவிலிருந்து முழுமையாக குணம் அடைந்து விட்டனர், பாடகர் எஸ்.பி.பி இன்னும் மருத்துவமனையில் உள்ளார். இந்த நிலையில் முன்னாள் குடியரசுத்தலைவர்பிரணாப் முகர்ஜி மூளையில் உருவான ரத்தக்கட்டியை அகற்ற ஆக., 10ல் டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ரத்தக்கட்டி அகற்ற பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, நுரையீரல் தொற்றும் ஏற்பட்டது. இதனால் அவர் ‘கோமா’ நிலைக்கு சென்றார் ‘வென்டிலேட்டர்’ சிகிச்சையில் உள்ளார். நேற்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், நுரையீரல் தொற்று மற்றும் சிறுநீரக செயல்பாட்டுக்கான சிகிச்சை தொடர்கிறது என்றும் கோமா நிலையில் இருப்பதாகவும், வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.