முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ காலமானார்

மூளையில் இரத்த உறைவு கண்டறியப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று 84வது வயதில் உயிர் நீத்தார்

முதலில் கொரோனா தொற்றிற்காக கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி டெல்லி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அவருக்கு மூளையில் ரத்த உறைவு இருப்பது கண்டறியப்பட்டது. அதிக நாட்கள் வெண்டிலேட்டர் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

பிரணாப் முகர்ஜீ இந்திய அரசியலில் முதுகெலும்பகத் திகழ்ந்தவர். நிறைய சாதனைகள் படைத்திருக்கிறார். இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டது அதில் மிகப்பெரிய ஒன்றாகும். 50 ஆண்டுகள் அரசியலில் இருந்த இவர், 2012 முதல் 2017 வரை குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார்.

மேற்கு வங்கத்தில் பிறந்து, பிறகு காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக விளங்கியவர். மதிய நிதி அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் பனி புரிந்தவர்.

2019ஆம் ஆண்டு இவருக்கு பா.ஜ.க அரசால் உயரிய விருதான பாரத ரத்னா பட்டம் வழங்கப்பட்டது. பத்ம விபூஷண் போன்ற பட்டங்களைப் பெற்றவர்.

பிரணாப் முகர்ஜீ அவர்கள் தமக்கு பல சமயங்களில் நல்ல வழிகாட்டியதாக பிரதமர் மோடி இவரைப் புகழ்ந்து பேசுவார். இப்படிப்பட்ட நல்ல தலைவர் பிரிந்தது இந்தியாவிற்கே பெரிய இழப்பாகும்.

Exit mobile version