உயிரில் கலந்த உறவு.. துக்கத்தை தாங்க முடியவில்லை… பிரசன்ன உருக்கம் ட்வீட்…

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு தனக்கு அழுகையும் சிரிப்பையும் கலந்து உறவை கொடுப்பது ஏன் என்றே தெரியவில்லை என நடிகர் பிரசன்னா உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தாமரைக்குளத்தில் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பலரும் அவரின் இறப்பிற்கு இரங்கள் தெரிவித்துள்ளனர். இவரின் இரங்கல் பலரையும் கண்கலங்க வைத்துவிட்டது. இசையின் நாயகன் இவருக்கு மறைவே கிடையாது. இவருக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இவருக்கு இரங்கல் தெரிவித்து வந்துள்ளனர்.

அதேபோல் இப்போது பிரசன்ன அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் டீவீட்டில் அவர் தெரிவித்தது யாதெனில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைந்து விட்டார். அவரது மறைவு நேரத்தில் துக்கப்படுவதா? அல்லது அவரது பாடல்களை கேட்டு சந்தோஷம் அடைவதா? என எந்த மனநிலையில் நான் இப்போ இருக்கிறேன் என்றே தெரியவில்லை என நடிகர் பிரசன்னா மிகவும் உருக்கமாக ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். உயிரில் கலந்த உறவு எஸ்.பி. பாலசுப்ரமணியம் என நெகிழ்ந்துள்ளார்.

Exit mobile version