ரோம் நகரில் பிரதமர் நரேந்திர மோடி!!

இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் நகரை சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.


இத்தாலி நாட்டின் பிரதமர் மரியோ டிரகி அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏர் இந்தியா ஒன் விமானம் மூலம் டெல்லியில் இருந்து நேற்று இரவு இத்தாலி புறப்பட்டார். இத்தாலி தலைநகர் ரோம் நகருக்கு சென்ற பிரதமரை அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர். நாளை மற்றும் நாளை மறுதினம் ரோம் நகரில் நடைபெறும் 16வது ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கேற்று,கொரோனாவுக்கு பிறகான பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பருவ நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்துவது தொடர்பாக உரையாற்றவுள்ளார்.

பின்னர் ஜி20 நாடுகளின் தலைவர்களிடம் தனியாக சந்தித்தும் ஆலோசனைகளை நடத்தவுள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தாலி பயணத்தின் போது வாட்டிகன் செல்லும் பிரதமர் அங்கு போப் ஆண்டவரை சந்திக்க உள்ளார். இரண்டு நாள் இத்தாலி பயணத்தை முடித்து கொண்டு இங்கிலாந்து புறப்படும் பிரதமர் மோடி 1-2 ஆகிய தேதிகளில் கிளாஸ்கோவில் நடைபெறும் “26 கட்சிகள் மாநாடு”-ல் பங்கேற்கிறார்.

பின்னர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்து இரு நாடுகள் தொடர்பாக சில ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ளார். இந்த கூட்டம் கடந்த 2020ம் ஆண்டே நடைபெற வேண்டியது ஆனால், கொரோனா பரவல் காரணமாக இவை ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version