பள்ளி கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க கட்டண நிர்ணய குழு உடனே நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு உதவிபெறாத கல்வி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், தனியார் பள்ளிகள் 40 % கல்விக் கட்டணத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வசூலிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2019-2020 கல்விக் கட்டண பாக்கியை ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் செலுத்த அனுமதி அளித்துள்ளது. 35 சதவீத கல்விக் கட்டணத்தை 2 மாதங்களுக்கு பிறகு தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டண நிர்ணய குழு, கட்டண நிர்ணய நடைமுறையை ஆகஸ்ட் முதல் 8 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கூறி வழக்கினை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.