நடிகை பிரியங்கா சோப்ரா UNFINISHED என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா UNFINISHED என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார்.
இந்திய சினிமாவின் பாலிவுட்டுக்கு என்றுமே தனி இடம் உண்டு. உலகத்தரமான படங்கள் இங்கிருந்து வெளியாகின்றன. அத்துடன் அங்குள்ள நடிகர், நடிகைகளுக்கு பல கோடிகள் சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது.
தினமும் பார்ட்டி கலாச்சாரமும் அங்குக் கோலோட்சிக் கொண்டுள்ளது. இந்நிலையில் விஜய் நடித்த தமிழன் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ப்ரியங்கா சோப்ரா.
இவர் ஹாலிவுட் பாப் பாடகர் ரிக் ஜொனாஸ் என்பவரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இவர் சோப்ரா UNFINISHED என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார்.
அதில், தனது வாழ்க்கையில் நடந்தவற்றை எழுத்தாக்கியுள்ளார். முக்கியமாக அவர் அமெரிக்காவில் படிக்கச் சென்றபோது எதிர்கொண்ட இனவெறி, பின்னர் இந்தியாவுக்கு திரும்பி உலக அழகிப்பட்டம் வென்றது முதற்கொண்டு பல விஷயங்கள் அதில் குறிப்பிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்விலை 28 அமெரிக்க டாலர் ஆகும்.