என்ன இப்படி இறங்கிட்டாரு சிறுத்தை சிவா?!

தமிழில் அஜித்குமார் நடிப்பில் வெளியான வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என தொடர்ந்து படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா . இதன் காரணமாக அவருக்கு வணிக நலன் சார்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது .

இவரது இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4 அன்று அண்ணாத்த வெளியானது. சிவா இயக்கிய பல படங்களின் தொகுப்பாக இந்த படம் இருப்பதாக கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. பலரும் பல விதங்களில் கிண்டலடித்து அவருடைய முந்தைய படங்களையும், வேறு சில படங்களையும் வைத்தே ‘அண்ணாத்த’ படத்தை எடுத்து முடித்துவிட்டார் என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

இருந்த போதிலும் அண்ணாத்த படத்திற்கு இணையாக முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் எதுவும் வெளிவரவில்லை என்பதால் தமிழகத்தில் 4 நாட்களில் 100 கோடி வசூலை பெற்றதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

நேற்று முதல் கடுமையான மழை பெய்து வருவதால் திரையரங்குக்கு படம் பார்க்க வரும் மக்கள் கூட்டம் குறைந்திருக்கிறது இந்த நிலையில்தன் மீதான விமர்சனங்களைத் துடைக்க ‘அண்ணாத்த’ படத்திற்காக யார் யாரெல்லாம் பாசிட்டிவ்வாக டிவீட் போடுகிறார்களோ அவற்றையும், படத்தின் வசூல் பற்றி டிவிட்டரில் அறிமுகமில்லாத, பிரபலமில்லாதவர்கள் வெளியிடும் ஆதாரமற்ற தகவல்களை கூட மறுபதிவு செய்து வருகிறார் இயக்குனர் சிறுத்தை சிவா.

இதற்கு முன்பு அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்புக்களில் கூட அஜித் போன்று கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்தவர்தான் சிவா

ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் தான் சரியாக படம் கொடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் அவரது எதிர்கால திரையுலக வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்ததால் தன்னை தற்காத்துக்கொள்ளவும், முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது

இதனால் அவரே நேரடியாக விளம்பர களத்தில் கவனம் செலுத்தி வருகிறார் என்கின்றனர் சிறுத்தை சிவாவின் நட்பு வட்டாரத்தினர்.

Exit mobile version