நாட்டில் வேலைவாய்ப்பின்மை, வறுமை அதிகரித்துள்ள நிலையில், இளைஞர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளுக்கு மத்திய அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி., ராகுல் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: நாட்டில் வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் மாதம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்றும் கிராமப் புறங்களிலும் வேலையின்மை அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது. இந்நிலை தொடர்ந்தால், நாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிடும்.
நாட்டின் பொருளாதார பிரச்னைகள், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்னை, தொழிலாளர்கள் பிரச்னை, ஏழை மக்களின் பிரச்னைகள் குறித்து, நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், அதனை அதிகரிக்கும் போக்கை மட்டும் கடைபிடித்து வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு. இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
