வழக்கமான அட்டவணையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்குகின்றன!

கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்பின்னர், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர், குறிப்பிட்ட வழித்தடங்களில் குறைந்த எண்ணிக்கையில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

7 மாதங்களுக்கு பிறகு, வழக்கமான கால அட்டவணையுடன் கூடிய ரயில் சேவை விரைவில் தொடங்குகிறது. முதல்கட்டமாக 78 ஏ.சி. ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் நேற்று அனுமதி அளித்தது. இவற்றில், 52 ரயில்கள், தூங்கும் வசதி கொண்ட ஏ.சி. ரயில்கள் ஆகும். மீதி 26 ரயில்கள், இருக்கை வசதி கொண்ட ஏ.சி. ரெயில்கள் ஆகும்.

Exit mobile version