வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு …சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு !

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழைபெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்தகவல்.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழைபெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்தகவல்.

நாட்டில் மழைக்காலம் தொடங்கிவிட்டது. இதனால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீப காலமான மானம் பார்த்த பூமியாக வறண்டுகிடந்த நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சோகத்தில் நிலத்தடியிலும் நீர் இல்லாமல் நமநாட்டு விவசாயிகள் கடும் கஷ்டத்தில் உள்ளனர்.

அவர்களின் கஷ்டத்தைத் தீர்க்க வர்ணபகவான் அவ்வப்போது கருணை காட்டுகிறார்.

அந்த வகையில்ம் சென்னை வானிலை மையம்  வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் கூறியுள்ளதாவது, வட ஆந்திர தெற்கு ஒடிஷா போன்ற கடலோரப் பகுதிகளிலும் அதனையொட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

எனவே அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்திலுள்ள 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான அளவு மழைபெய்யும்  எனத் தெரிவித்துள்ளது.

Exit mobile version