ரஜினி போட்ட ட்வீட்: ட்ரெண்டிங் ஆகும் #அனுபவமே_பாடம் ஹேஷ்டேக் !

ராகவேந்திரா திருமண மண்டபத்தின் சொத்து வரி குறித்த விவகாரத்தைப் பற்றி ரஜினிகாந்த் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் பயன்படுத்திய “அனுபவமே_பாடம்” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.
rajini

சொத்து வரி மீது அபராதம் விதிக்க தடை விதிக்க வேண்டும் எனக்கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினி மனு தாக்கல் செய்திருந்தார்..இந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் நேற்று (அக்.,14) விசாரணைக்கு வந்தபோது, ரஜினி தரப்பை நீதிபதி கடுமையாகக் கண்டித்தார். நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதற்காக அபராதம் விதிக்கப் போவதாகவும் நீதிபதி எச்சரித்தார்.

அந்த ‛மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்’ என ரஜினி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்தது. சமூக வலைதளங்களில் பலரும் வரி செலுத்தாத ரஜினி என விமர்சனத்தை முன்வைத்தனர்.

இன்று, 6.50 லட்சம் ரஜினி தரப்பில் செலுத்தப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த ரஜினி, ‛ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரத்தில் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமே பாடம்,’ என்று கூறியிருந்தார்.

இதில் #அனுபவமே_பாடம் என்னும் ஹேஷ்டேக் தற்போது இணையத்தில் டிரண்டாகியுள்ளது. ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் எப்போதும் டிரண்டாகும் நிலையில், அவரது டீவீட்டில் பதிவிட்டுள்ள வார்த்தையும் தற்போது டிரண்டாகியுள்ளது.

Exit mobile version