நாட்டின் பிரதமருக்கு சினிமாவின் தலைவர் ரஜினி பிறந்தநாள் வாழ்த்துக்கள்…

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து சினிமாவின் தலைவன் என்று கூறப்படும் ரஜினிகாந்த் அவர்களும் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, இந்தக் கடினமான காலங்களில் உங்களுக்குள் உள்ள கடினமான மனிதர் அதிக வலிமையைப் பெற வாழ்த்துகிறேன். பிறந்த நாள் வாழ்த்தக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Exit mobile version