பேரறிவாளன் பரோல் நிராகரிப்பு -தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் விளக்கம்

பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் பேரறிவாளனுக்கு பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் செப்டம்பர் 8 ம் தேதி விளக்கம் அறிவிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், கடந்த 28 ஆண்டுகளாக மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இவருக்கு 90 நாள் பரோல் கேட்டு இவரின் தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தது , அப்பொழுது அற்புதம்மாள் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு அனுப்பிய மனு நிராகரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி விட்டதாக சிறைத்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது .

இந்தநிலையில் மீண்டும் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பேரறிவாளனின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில், செப்டம்பர் 8ம் தேதி இவ்வழக்கு குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

Exit mobile version