இந்திய விமானப் படை 88ஆவது ஆண்டு தினம்!

இந்திய விமானப் படையின் 88வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, விமானப் படை போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
rajnathsingh

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய விமானப் படை நாட்டின் வான்பகுதியை, எது வந்தபோதிலும், எப்பொழுதும் காக்கும் பணியில் ஈடுபடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நவீனமயப்படுத்துவது மற்றும் உள்நாட்டிலேயே தயாரிப்பது ஆகியவற்றின் வழியே இந்திய விமானப் படையின் போர் புரியும் திறனை மேம்படுத்தும் பணியில் நாம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

விமானப் படையின் போர் வீரர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 88 வருட அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் திறமையான செயல்பாடு ஆகியவை இந்திய விமானப் படை கடந்து வந்த பயணத்திற்கு அடையாளமாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version