தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராவத் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

புதுடெல்லி:
ஜவகர்லால் நேரு போர்ட் ட்ரஸ்ட் துறைமுகங்களை தனியார்மயமாக்கும் திட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்தும் மாநிலங்களவையில் இன்று விவாதிக்க கோரி சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
அதேபோல், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பி.டி.பி எம்.பி நசீர் அகமது அளித்துள்ள நோட்டீசில், எம்.பி.எல்.ஏ.டி நிதி மற்றும் ஜம்மு முதல் ஸ்ரீநகர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையின் மோசமான நிலை குறித்து விவாதிக்க வேண்டும் என கூறியுள்ளார் .பகுஜன் சமாஜ் எம்.பி வீர் சிங் அளித்துள்ள நோட்டீசில், ஊரடங்கு மற்றும் கொரோனா பெருந்தொற்றால் வேலையின்மை அதிகரித்திருப்பது பற்றியும் விவாதிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.