1ம் தேதி பள்ளிகள் திறப்பு எதிரொலி தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

ராசிபுரத்தில் தனியார் பள்ளி வாகனங்களை நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்தனர். 

கொரோனவால் பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது ஸ்டாலின் அவர்கள் செப்டம்பர் ஒன்று முதல் பள்ளிகள் திறக்கலாம் என்றும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு தடை இல்லை என கூறி இருக்கின்றார்.

அதனால் பல மாதங்களாக மூட பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. இதையடுத்து, ராசிபுரம் வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் வாகனங்களை ஆய்வு செய்து சான்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

தற்போது ராசிபுரத்தில் தனியார் பள்ளி வாகனங்களை நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்தனர். 32 வாகனங்களை ஆய்வு செய்து பார்த்ததில் 7 வாகனங்களுக்கு போதிய ஆவணம் இல்லாததால் மறுஆய்வுக்கு திருப்பி அனுப்பினார்.

இந்த ஆய்வானது நாமக்கல் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் ராசிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கவிதா, முருகேசன், தாசில்தார், ராசிபுரம் போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் ஆகியோர் கலந்துகொண்டு 32க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது, வாகனங்களில் அவசர கால வழி, சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளனவா, மின் விளக்குகள், வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தி உள்ளனரா என்பதையும், வாகனத்தில் கிருமி நாசினி பொறுத்தப்பட்டுள்ளதை எனபதையும் ஆய்வு செய்தனர்.

Exit mobile version